11 இடங்களில் பற்றி எரியும் தீ! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

 

11 இடங்களில் பற்றி எரியும் தீ! ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

என்ன தான் உலகம் முழுவதும் விஞ்ஞானம் பெரும் அளவில் வளர்ச்சியடைந்திருந்தாலும், இயற்கைக்கு முன்பாக மனிதன் இன்னும் கடுகளவிலேயே இருக்கிறான். இயற்கை பேரிடர்களை எதிர்த்து ஒரு கட்டத்திற்கு மேல் மனிதனால் போராட முடியவில்லை என்பதை மெய்பிக்கும் விதமாக உலகின் பல்வேறு மூலைகளில் சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தே வருகின்றன.

வடகிழக்கு பருவ மழையினால்  தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்ற நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதிகளில் கடந்த 10 தினங்களாக பல இடங்களில் தீ பற்றி எரிந்து வருகிறது. அம்மாகாணத்தில் நிலவி வரும் வறண்ட வானிலை காரணமாக தீப்பற்றி எரியத் துவங்கிய நிலையில், தொடர்ந்து அந்த பகுதிகளில் வீசி வரும் சூறைக்காற்று காரணமாக பல இடங்களிலும் தீ பரவத் தொடங்கியுள்ளது. இதனால் தீப்பற்றி எரியும் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை அதிகாரிகள் வெளியேற்றினார்கள். 

Wildfire

இந்நிலையில், திடீரென சான் பெர்னார்டினோ பகுதியில் தீப்பற்றி, அங்கிருந்த வீடுகளுக்கும் வேகமாக தீ பரவியது. இதையடுத்து அந்த பகுதிகளில் வசித்து வந்த சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் சுமார் 7,000 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். வேகமாக பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.