பள்ளிக்கு செல்ல வற்புறுத்திய பெற்றோர் : 10ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!

 

பள்ளிக்கு செல்ல வற்புறுத்திய பெற்றோர் : 10ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!

அயனாவரத்தில் பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம் கே.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் நிர்மலா (35). இவருக்கு சரண் ராஜ் (16), அபிஷேக் (15) ஆகிய 2 மகன்கள் இருந்தனர், இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்து விட்டதால், நிர்மலா வேலைக்கு சென்று பிள்ளைகளை படித்து வைத்து வந்திருக்கிறார். கடந்த 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போது சரண் ராஜ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பள்ளிக்கு செல்லுமாறு சரண் ராஜை நிர்மலா கண்டித்து வந்ததாக தெரிகிறது.

பள்ளிக்கு செல்ல வற்புறுத்திய பெற்றோர் : 10ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!

இந்த நிலையில் இன்று காலை நிர்மலா வேலைக்கு சென்றவுடன், சரண் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரண் ராஜ் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அபிஷேக், உடனே கத்தி கூச்சலிட்டுள்ளார். விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர், சரண் ராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சரண் ராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சரண் ராஜ் தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.