பெற்றோர் பைக் வாங்கி தர மறுத்ததால், பள்ளி மாணவர் தற்கொலை!

 

பெற்றோர் பைக் வாங்கி தர மறுத்ததால், பள்ளி மாணவர் தற்கொலை!

கரூர்

கரூர் அருகே பெற்றோர் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் மனமுடைந்த 10 ஆம் வகுப்பு மாணவர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் புதூர் குடையப்பட்டியை சேர்ந்த பால்சாமி மகன் வேல்வினோத் (16). இவர் அரசுப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா விடுமுறை காரணமாக வேல்வினோத், கரூர் மாவட்டம் தோகமலையில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கி, அங்குள்ள கடையில் பணிபுரிந்து வந்தார்.

பெற்றோர் பைக் வாங்கி தர மறுத்ததால், பள்ளி மாணவர் தற்கொலை!

இந்த நிலையில், வேல்வினோத் தனது தந்தையிடம் இருசக்கர வாகனம் வாங்கி தரும்படி கேட்டு வந்துள்ளார். அதற்கு பால்சாமி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வேல்வினோத் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.