10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதன்முறையாக மாணவிகளை பின்னுக்கு தள்ளிய மாணவர்கள்!

 

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதன்முறையாக மாணவிகளை பின்னுக்கு தள்ளிய மாணவர்கள்!

கொரோனா பாதிப்பால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள் மற்றும் வருகையின் அடிப்படையிலேயே மதிப்பெண் கணக்கிடப்படும் என்றும் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் கடந்த சனிக்கிழமை அறிவிக்கபபட்டிருந்தது. அதன் படி இன்று காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்கள் எல்லாரும் ஆல்பாஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, 100% மாணவர்கள் தேர்ச்சி ஆகினர். மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை www.tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் கொடுத்த மொபைல் எண்ணுக்கும் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதன்முறையாக மாணவிகளை பின்னுக்கு தள்ளிய மாணவர்கள்!

இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதன்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக மாணவிகள் தான் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெறுவர். ஆனால் இந்த முறை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டதால் இந்த முறை மாணவர்கள் அதிகமாக தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த தேர்வில் 4,71,759 மாணவர்களும் 4,68,070 மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.