மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. எல்லாரும் ஆல்பாஸ்!

மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. எல்லாரும் ஆல்பாஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 15 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. தற்போது ஹால்டிக்கெட் கொடுக்கும் பணி முடிந்து, தேர்வு நடத்தும் பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த தேர்வை நடத்த அரசு சில அதிகாரிகளை நியமித்திருந்தது. இதனிடையே மீதமுள்ள 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு; 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. எல்லாரும் ஆல்பாஸ்!

இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறும், ஒத்தி வைக்குமாறும் ஆசிரியர்கள் சங்கம் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனால் பொதுத்தேர்வு குறித்து முதல்வருடன் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு, தெலுங்கானா மாநிலத்தை போல தமிழகத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், ; 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் எல்லாரும் தேர்வு இல்லாமல் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.