கோவையில் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 

கோவையில் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

கோவை

கோவையில் மதிப்பெண் குறைந்ததாக கூறி 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆவாரம்பாளையம் ராமசாமி லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர் மருதுபாண்டி. இவரது மகள் யாழினி(15). இவர் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்காக அவரது பள்ளிக்கு சென்றிருந்தார். அப்போது, 500-க்கு 180 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

கோவையில் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

இதனால், சக மாணவிகள் தன்னை கேலி செய்வார்கள் என்று கூறி யாழினி கதறி அழுதுள்ளார். அவரை பெற்றோர் சமாதானம் செய்தும், கேட்கவில்லை. இந்த நிலையில், தனது வீட்டின் குளியல் அறையில் யாழினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பீளமேடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து மருதுபாண்டி அளித்த புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதிப்பெண் குறைந்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.