நாளை சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

 

நாளை சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகளுக்காக மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அந்தவகையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11 ஆம் தேதி வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகின. அதே போல் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இரண்டு நாள் கழித்து அதாவது ஜூலை 13ம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவல் பொய்யானது என்றும் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்றும் சிபிஎஸ்இ செயலாளர் தெரிவித்திருந்தார்.

நாளை சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

அதனையடுத்து நேற்று சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.