10ம் வகுப்புத் தேர்வு ரத்து… பா.ம.க-வுக்கும் நன்றி சொன்ன தி.மு.க எம்.பி!

 

10ம் வகுப்புத் தேர்வு ரத்து… பா.ம.க-வுக்கும் நன்றி சொன்ன தி.மு.க எம்.பி!

10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்பது தி.மு.க, அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ம.க-வுக்கு கிடைத்த வெற்றி என்று தி.மு.க எம்.பி கூறியிருப்பது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

10ம் வகுப்புத் தேர்வு ரத்து… பா.ம.க-வுக்கும் நன்றி சொன்ன தி.மு.க எம்.பி!10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது குறைந்த பட்சம் தள்ளியாவது வைக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான பா.ம.க-வும் இந்த கோரிக்கையை நீண்டநாட்களாக எழுப்பி வந்தது. தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஏன் தேர்வை ஒத்திவைக்கக் கூடாது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு தமிழக அரசு, வரும் மாதங்களில் கொரோனா பாதிப்பு மோசமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் இப்போதே நடத்தி முடித்துவிடுவது நல்லது என்று கூறியது. தேர்வைத் தள்ளிவைப்பது பற்றி விரிவான பதிலை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

http://

இதற்கு பலரும் நன்றி தொிவித்து வருகின்றனர். தி.மு.க எம்.பி செந்தில் குமார் வெளியிட்டுள்ள ட்வீடில், “இது தி.மு.க, அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவாக இருந்த பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி. விடாமல் இதை வலியுறுத்திய தி.மு.க தலைவர், இளைஞரணி செயலாளர், மாணவ அணி செயலாளருக்கு கிடைத்த வெற்றி.

http://

வழக்கு தொடர்ந்தவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.
தி.மு.க எம்.பி ஒருவர் பா.ம.க-வுக்கு நன்றி கூறியிருப்பது தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.