“180 தொகுதிகளில் திமுக” : வேட்பாளர் பட்டியல் குறித்த அப்டேட்

 

“180 தொகுதிகளில்  திமுக” : வேட்பாளர் பட்டியல் குறித்த அப்டேட்

வரும் 10ஆம் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட செயலாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“180 தொகுதிகளில்  திமுக” : வேட்பாளர் பட்டியல் குறித்த அப்டேட்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி கட்சியில் விசிகவுக்கு 6, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, மனித நேய மக்கள் கட்சி 2 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 என்ற முறையில் 12 சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 54 சீட்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டு 180 தொகுதி அல்லது அதற்கும் மேலாகதிமுக களமிறங்கவுள்ளதாம். இன்னும் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்த சூழலில் இன்று 4வது கட்டமாக திமுக விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

“180 தொகுதிகளில்  திமுக” : வேட்பாளர் பட்டியல் குறித்த அப்டேட்

இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் மார்ச் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாவட்ட செயலாளர்களுடன் காணொளி வாயிலாக நடத்திய கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். கண் கொத்தி பாம்பாக எதிர்க்கட்சிகள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12, 13 ஆம் தேதி தேதிகளில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார்.