10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் இணைப்பு! – பாடத்திட்டங்கள் 50 சதவிகிதம் வரை குறைய வாய்ப்பு

 

10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் இணைப்பு! – பாடத்திட்டங்கள் 50 சதவிகிதம் வரை குறைய வாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி பாடத்திட்டத்தில் பாடங்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் வரை குறைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுவருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கிவிட்டன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஆன்லைன் வகுப்பை நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் உள்ளனர். புதிதாக மொபைல் வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் இணைப்பு! – பாடத்திட்டங்கள் 50 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புஇதனால் குறிப்பிட்டவர்கள் மட்டும் படித்துக்கொண்டே செல்ல, மற்றவர்கள் படிக்கவே முடியாத நிலையில் இருப்பது சமச்சீரற்ற தன்மையை ஏற்படுத்தும். தேர்வில் கூட இதன் தாக்கம் வெளிப்படும் என்று கல்வியாளர்கள் எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து இந்த கல்வியாண்டில் பாடங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க சிறப்புக் குழு ஏற்படுத்தப்பட்டது.

10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகங்கள் இணைப்பு! – பாடத்திட்டங்கள் 50 சதவிகிதம் வரை குறைய வாய்ப்புஇந்த நிலையில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு பாடத்திட்டத்தில் சமூக அறிவியலில் உள்ள இரண்டு புத்தகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. புதிய பாடபுத்தகம் பள்ளிகள் திறக்கப்படும்போது வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல், 11, 12ம் வகுப்பிலும் அதிகப்படியாக உள்ள பாடங்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாடங்கள் குறைக்கப்பட்டு ஒரே புத்தகமாக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வரும் கல்வியாண்டில் தற்போதைய சூழலில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே தெரியவில்லை. கொரோனாத் தொற்று, செப்டம்பர், அக்டோபரில் முடிந்தாலும் மழைக்காலம் முடிந்த பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனால், இந்த ஆண்டு பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவது சந்தேகமே என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு எல்லா வகுப்பு பாடத்திட்டத்திலும் ஓராண்டுக்கு மட்டும் 50 சதவிகித பாடங்களைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.