10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு : 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி !

 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு  : 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி !

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது.

இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள செல்ஃபோன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறித்து எஸ்எம்எஸ் அனுப்பப்படும் எனவும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு  : 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி !

எத்தனை மாணவர்கள் தேர்வுக்காக பதிவு செய்து இருந்தார்களோ அத்தனை மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் 100% தேர்ச்சி என்பது வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 889 பேர் இந்த தேர்வுக்காக பதிவு செய்து இருக்கிறார்கள். பள்ளி மாணவர்களைப் பொருத்தவரை மாணவிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 ஆகவும், மாணவர்களுடைய எண்ணிக்கை 4 லட்சத்து 71 ஆயிரத்து 759 ஆகவும் உள்ளது. எனவே அனைவருக்குமே 100 சதவீத தேர்ச்சி என்பது வழங்கப்பட்டிருக்கிறது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியீடு  : 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி !

பள்ளி மாணவர்களைப் பொருத்த வரைக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பள்ளிகள் எண்ணிக்கை என்று பார்த்தால் 12,690. இதில் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரத்து 368, உயர்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை ஆயிரத்து 372 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எண்ணிக்கை 6,235 ஆக உள்ளது. வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியாகும் போது மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம் எவ்வளவு? மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் போன்ற விவரங்கள் எல்லாம் வழக்கமாக முடிவுகள் வெளியாகும் போது வெளியிடப்படும். ஆனால் இந்த முறை காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையிலும் , வருகைப்பதிவு அடிப்படையிலும் தேர்ச்சி வழங்கப்பட்டிருக்கிறது.