10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் எப்போது? – தேர்வுத்துறை

 

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் எப்போது? – தேர்வுத்துறை

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேர்வுகள் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதிவரை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ஒத்தி வைக்குமாறு பலர் கருத்து தெரிவித்தனர். அதனால் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் மறுசுழற்சி முறையில் உபயோகிக்க கூடிய மாஸ்க் வழங்க வேண்டும் என்றும் வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டாம் என்றும் அவர்களை நேரடியாக தேர்வு எழுத அனுமதிக்குமாறும் பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் எப்போது? – தேர்வுத்துறை

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவர்களிடம் வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று ஹால் டிக்கெட்டுகளை வழங்க வேண்டும்.