சென்னையில் 10 இடங்களில் பாமக போராட்டம்

 

சென்னையில் 10 இடங்களில் பாமக போராட்டம்

வரும் 30ம் தேதி அன்று சென்னையில் 10 இடங்களில் பாமக சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்திருக்கிறார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், அயனாவரம், அமைந்தகரை, எழும்பூர், மாம்பலம், கிண்டி, வேளச்சேரி ஆகிய 10 இடங்களில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ள ஜி.கே.மணி,

சென்னையில் 10 இடங்களில் பாமக போராட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி என்று பிடிஓ அலுவலகங்கள் முன்பு அறப்போராட்டம் நடத்துகிறது பாமக. இதை முன்னிட்டு, இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். ஒவ்வொரு இடங்களிலும் மிக் ஆதிக அளவில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று வன்னியர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

மேலும் அவர் இந்த போராட்டம் குறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அதிகபெரும்பான்மை மக்கள் தொகையை கொண்ட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் மிக மிக குறைவான இடங்களே கிடைத்து வருவதன், புள்ளிவிபர பட்டியல் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னையில் 10 இடங்களில் பாமக போராட்டம்

எல்லா சமுதாயங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும் வன்னியர்களூக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு கோரி 40 ஆண்டுகளாக போராடி வரும் ராமதாஸ் தற்போது அறிவிக்கப்பட்டு நடைபெற்று வரும் மனு கொடுக்கும் அறப்போராட்டம் வருகின்ற 30.12.2020 புதன் கிழமை அன்று 388 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் 10 இடங்களில் பாமக போராட்டம்