பாடியில் சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது!

 

பாடியில் சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது!

அம்பத்தூர் அருகே ஒரு வீட்டின் மாடியில் சூட்கேஸில் பதுக்கப்பட்ட 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகளவில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்படுகிறது. அந்த வகையில் அம்பத்தூர் அருகே ஒரு வீட்டின் மாடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூரை அடுத்த கொரட்டுர் பாடி பகுதியில் உள்ள பஜனை தெருவில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பாடியில் சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல்: ஆட்டோ டிரைவர் கைது!

அந்த தகவலின் பேரில், அப்பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் தலைமையிலான குழு அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது திடீரென ஒரு வீட்டின் மாடிக்கு சென்ற போலீசார், ஒரு சூட்கேஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அங்கிருந்த ஆட்டோ டிரைவர் மகேஷ்குமார் (24) என்பவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் தான் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்து செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். ஊரடங்கால் ஆட்டோ ஓட்டுவதில் போதிய வருமானம் இல்லை என்பதால் கஞ்சா விற்பனை செய்ததாகவும் சவாரி செல்லும் இடங்களில் விற்பனை செய்வதாகவும் தன்னுடன் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாகவும் மகேஷ்குமார் தெரிவித்திருக்கிறார். அவர் அளித்த தகவலின் பேரில், இதில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.