வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு 10 நாட்களுக்குள் மீண்டும் வந்திருக்கும் தமிழருவி மணியன்

 

வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு 10 நாட்களுக்குள்  மீண்டும் வந்திருக்கும்  தமிழருவி மணியன்

நான் போகிறேன்.. வரமாட்டேன் என்று சொன்ன தமிழருவி மணியன் 10 நாட்களுக்குள் மீண்டும் வந்திருக்கிறார்.

சொன்னதைத்தான் செய்வேன்; செய்யுறதைத்தான் சொல்வேன் என்று பேசிய ‘பஞ்ச்’டயலாக்கின்படியே டிசம்பர் 31ம் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் ரஜினி என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், கட்சி தொடங்கவில்லை என்று டிசம்பர் 29ம் தேதியே அறிவித்துவிட்டார் ரஜினி.

வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு 10 நாட்களுக்குள்  மீண்டும் வந்திருக்கும்  தமிழருவி மணியன்

ரஜினி கட்சி தொடங்குவதற்கு முக்கியமானவர்களில் ஒருவராக இருந்து வந்த ‘காந்திய மக்கள் இயக்க’ தலைவர் தமிழருவி மணியன், இதனால் விரக்தியடைந்து, 30ம் தேதி தானும் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்தியமக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் சொல்லி இருந்தார்.

அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. இறப்பு என்னை தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன் என்று சொல்லி இருந்தார். திமுகவில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய்வருகிறேன் என்றார். நான் போகிறேன்.. வரமாட்டேன் என்றும் சொல்லி இருந்தார்.

வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு 10 நாட்களுக்குள்  மீண்டும் வந்திருக்கும்  தமிழருவி மணியன்

இப்படியெல்லாம் சொல்லி, சரியாக 10 நாட்கள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் பழையபடி காந்திய மக்கள் இயக்க பணிகளை பார்க்க சென்றுவிட்டார்.

கோவையில் நேற்று நடந்த காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழருவி மணியன் பங்கேற்றார். பொதுச்செயலாளர் குமரய்யா வெளியிட்ட அறிவிப்பில், ‘காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’’ என்று இருக்கிறது.