10 நிமிட ஆலோசனையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் எடுத்த முடிவு

 

10 நிமிட ஆலோசனையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் எடுத்த முடிவு

அண்மையில் நடந்த அமித்ஷாவுடனான சந்திப்பில், சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்குள் சேர்க்கலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனையில், சேர்ப்பதுதான் நல்லது. இல்லாவிட்டால் தேவையில்லாமல் தினகரன் கட்சிக்குத்தான் வாக்குகள் செல்லும். சசிகலா ஆதரவு இல்லாத தேர்தல் என்றால், அது தென்மாவட்டங்களில் வெற்றியை பெருமளவில் பாதிக்கும். எனது வெற்றி வாய்ப்பு கூட பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்று ஓபிஎஸ் நிறைய பேசப்பேச, எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்துள்ளார் ஈபிஎஸ்.

10 நிமிட ஆலோசனையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் எடுத்த முடிவு

அதன்பின்னர் தீவிர அரசியலில் இருந்தே சசிகலா விலகுவதாக அறிவித்தாலும், அதிமுகவுக்குள் வரவே அவரும் விரும்புவதாக தகவல். எலெக்சன் வரைக்கும் அமைதியாக இருங்க. ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு உரிய மரியாதை வந்து சேரும் என்று சசிகலாவுக்கு எடப்பாடி தூது அனுப்பியதாகவும் செய்திகள் வந்தன.

10 நிமிட ஆலோசனையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் எடுத்த முடிவு

இந்நிலையில், இப்போது இருக்கும் செட்டப்பை ஏற்றுக்கொண்டால் சசிகலா அதிமுகவுக்குள் வருவது பற்றி பரிசீலிக்கலாம் என்று சொன்ன ஓபிஎஸ், ஜெயலலிதா மறைவுக்கு பின்னல் சில சந்தேகங்கள் சசிகலா மீது இருந்தது. அம்மா சமாதியில் நான் அளித்த பேட்டியை பார்த்தால் உங்களுக்கு தெரியும். சில சூழல்களில் அம்மா மரணத்தில் அவருக்கு கெட்ட பெயர் வரக்கூடிய சூழல் இருக்கிறது. அதற்காக ஒரு நீதி விசாரணை வைத்து அவர் நிரபராதி என்று நிரூபித்தால் அவருடைய கெட்டபெயர் விடுபடும் என்பதை தான் நான் சொல்லிருக்கிறேன். எனக்கு அவர் மீது எந்த சந்தேகமும் இருந்ததில்லை. நான் அவருடனும், அம்மாவுடனும் பயணித்திருக்கிறேன். 30 ஆண்டுகள் அம்மாவுடன் அவர் இருந்திருக்கிறார்கள். அவர் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை தெரிவித்திருந்தார்.

10 நிமிட ஆலோசனையில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் எடுத்த முடிவு

சசிகலா விடுதலையாகி வந்த நேரத்தில் சசிகலா மீதும் தினகரன் மீதும் கடுமையாக விமர்சனங்களை அள்ளி வீசிய ஈபிஎஸ், இப்போது ஸ்டாலினை மட்டுமே வறுத்தெடுக்கிறார்.

இந்த சூழலில் சசிகலா விவகாரம் குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் 10 நிமிடம் ஆலோசனை நடத்தியிருகிறார்கள். எடப்பாடியில் ஈபிஎஸ்க்கு வாக்குகள் சேகரிக்க சென்ற ஓபிஎஸ் சேலத்தில் தங்கியிருந்தார். கரூர் தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலத்தில் இருந்து புறப்பட்ட ஈபிஎஸ், ஓட்டலில் தங்கியிருந்த ஓபிஎஸ்சை சந்தித்து வரவேற்றார்.

பின்னர் இருவரும் 10 நிமிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தேர்தலுக்கு பின்னர் சசிகலா குறித்து முடிவெடுப்பதை விட, தேர்தலுக்கு முன்னரே அந்த முடிவை எடுத்துவிட்டால், அறிவித்துவிட்டால் நல்லது. தேவையில்லாமல் வாக்குகள் சிதறுவதை தடுக்கலாம் என்று இருவரும் பேசியிருக்கிறார்கள்.