இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீண்டும்…கமல்

இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீண்டும்…கமல்

அம்மா ஆட்சி, அம்மா வழியில், அம்மா காட்டிய பாதை, அம்மா வழியில், அம்மாவின் திட்டங்கள் என்று அம்மா, அம்மா, அம்மா என்று அம்மா சரணம் பாடி வந்தனர் அதிமுகவினர். இன்றளவும் அதிமுகவுக்கு வாக்குகள் சேகரித்து கொடுப்பது எம்.ஜி.ஆர். என்கிற அந்த மூன்றெழுத்து மந்திரம்தான். அதிமுகவினர் இதை மறந்ததால், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கையில் எடுத்தார்.

இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீண்டும்…கமல்

தான் எம்.ஜி.ஆரின் நீட்சி என்றும், எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன் என்றும், எம்.ஜி.ஆரின் நல்லாட்சி தருவேன் என்றும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், கதிகலங்கி போனார்கள் அதிமுகவினர்.

பெயருக்குத்தான் அம்மா பெயரை சொல்கிறோம். உண்மையில், ஓட்டு கொடுப்பது எம்.ஜி.ஆர்.தான் என்பதை உணர்ந்து, எம்.ஜி.ஆர். பெயரை அதிகம் உச்சரிக்க தொடங்கிவிட்டார்கள்.

இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீண்டும்…கமல்

அதிமுகவின் போஸ்டர்களிலும் இப்போது எம்.ஜி.ஆரின் படத்தை பெரிதாக பார்க்க முடிகிறது. இன்றைக்கு நடந்த அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்திலும் ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் மாறி மாறி, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். என்று புகழ் பாடினார்கள்.

இதுகுறித்து கமல்ஹாசன், ’’இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக்கொண்டிருந்தவர்கள் மீண்டும் புரட்சித் தலைவரின் பெயரைப் புழங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.’’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகாறும் ‘அம்மா ஆட்சி’ என்றே முழங்கிக் கொண்டிருந்தவர்கள் மீண்டும்…கமல்

அவர் மேலும், ‘’எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் முன்னரே, அவரவர் குவித்த சொத்துக்களுக்கு கணக்கு காட்டச் சொன்னவர் வாத்யார். காட்டுவீர்களா?
ஒரே நாளில் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தவர் எம்.ஜி.ஆர். ஊழலில் சாதனை படைத்தவர்களை நீக்க துணிச்சல் உண்டா?! ’’என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

திருச்சி மலைக்கோட்டையில் அவர் பிரச்சாரம் செய்துவிட்டு இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.