பேரழிவு ஏற்படுத்திய சீனா உலக நாடுகளுக்கு 10 டிரில்லியன் டாலர் வழங்க வேண்டும் – டிரம்ப்

 

பேரழிவு ஏற்படுத்திய சீனா  உலக நாடுகளுக்கு  10 டிரில்லியன் டாலர்  வழங்க வேண்டும் – டிரம்ப்

கொரோனா வைரஸ் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் உகான் நகரில் பரவி பின்னர் உலக நாடுகளுக்கு பரவியது. எல்லோரும் கோவிட்-19, கொரோனா வைரஸ் என்று சொல்லிவர, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனாட்ல் டிரம்ப் மட்டும் அது சீனா வைரஸ் என்றே சொல்லி வந்தார். தனது பேட்டிகளிலும், அறிக்கைகளிலும் அவர் ‘சீன வைரஸ்’என்றே கொரோனாவை சொல்லி வந்தார்.

பேரழிவு ஏற்படுத்திய சீனா  உலக நாடுகளுக்கு  10 டிரில்லியன் டாலர்  வழங்க வேண்டும் – டிரம்ப்

கொரோனா வைரஸினால் உலக நாடுகளில் அதிகம் பாதிப்பினை சந்தித்தது அமெரிக்காதான் என்கிறது ஆய்வுகள். சீனா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் டிரம்ப். அப்போது இதை சீனா எதிர்த்தாலும், அமெரிக்காவிலேயே டிரம்பின் பேச்சுக்கு எதிர்ப்புகள் இருந்தன.

இந்நிலையில் தற்போது அமெரிக்க ஊடகங்களில் சமீபத்திய செய்திகளின் படி, உகானில் உள்ள ஒரு ஆய்வகத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இதை மறுத்துள்ள சீனா, அந்த வைரஸ் அமெரிக்க ஆய்வகத்தில் இருந்து கூட வந்திருக்கலாம் என்று கூறி வருகிறது. இதனால், கொரோனா வைரஸின் மூலத்த 90 நாட்களில் கண்டுபிடியுங்கள் என்று உளவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

இதையத்து, சீன வைரஸ் உகான் ஆய்வகத்தில் இருந்தே பரவியது என்று நான் கூறியது சரியே என்று தற்போது அனைத்து தரப்பினரும் சொல்லி வருகின்றனர். எதிரி என்று சொல்லப்படுபவர்களும் சொல்லத்தொடங்கி விட்டனர். வைரஸ் மூலம் உலகுக்கு பேரழிவு ஏற்படுத்தியதற்காக அமெரிக்கா மற்றும் பிற உலக நாடுகளுக்கு 10 டிரில்லியன் டாலர் சீனா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.