ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள்.. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

 

ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள்.. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

ஏழை, எளியோருக்கு ஊரடங்கு நிவாரணமாக 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ரேசன் கடைகள் மூலமாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதன்படி தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் டோக்கன் முறைபடி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள்.. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

சில இடங்களில் 14 பொருட்கள் முழுவதுமாக வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்திருகிறது. உளுத்தம் பருப்பு இல்லை, மைதா இல்லை, கோதுமை இல்லை என்று பல புகார்கள் முதல்வர் அலுவலகத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள மூன்று ரேசன் கடைகளில் 14 பொருட்களில் உளுத்தம்பருப்பு இல்லை என்று சொல்லி கொடுத்ததால், பிரச்சனையாகி, முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் சென்றதால், கள்ளக்குறிச்சி ஆட்சியர், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அதன்பின்னர் உளுத்தம்பருப்பு வழங்கப்பட்டதுடன், ரேசன் கடை ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள்.. முதல்வர் போட்ட அதிரடி உத்தரவு

திருச்சி தெப்பக்குளம் சிந்தாமணிபகுதி ரேசன் கடையிலும் இதே போல பிரச்சனை எழுந்துள்ளது. மைதா மாவு, கோதுமை மாவு இல்லை என்று சொன்னதால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

இப்படி ஆங்காங்கே முறைகேடுகள் நடப்பது தனது கவனத்திற்கு வந்துள்ளதால், முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்குள் ரேசன் கடைகளில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.