இந்தியாவில் ஒரே நாளில் 1,092 பேர் மரணம்: முழு விவரத்தை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்!

 

இந்தியாவில் ஒரே நாளில் 1,092 பேர் மரணம்: முழு விவரத்தை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நம் நாடு, உயிரிழப்பில் 4 ஆம் இடத்தில் இருக்கிறது. ஆனால் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த மாநிலங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தால், விரைவில் இந்தியா இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதே போல கொரோனா அதிகமாக இருக்கும் 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினார். அதன் படி, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஒரே நாளில் 1,092 பேர் மரணம்: முழு விவரத்தை வெளியிட்டது மத்திய சுகாதார அமைச்சகம்!

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,67,273 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஒரே நாளில் 64,531 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் இதுவரை 20.37 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதே போல, மருத்துவமனைகளில் 6,76 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஒரே நாளில் 1,092 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழப்பு விகிதம் 1.92% ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை 3.17 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் 8.01 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.