மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 

மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பலர் ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்ததால், வரும் 15 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள பொதுத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. தற்போது 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

இந்த நிலையில், மாணவர்கள் ஹால்டிக்கெட் பெறுவதற்காக சென்னையில் 109 சிறப்பு பேருந்துகள் 63 வழித்தடங்களில் நாளை முதல் 13 ஆம் தேதி வரை இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதிக்காக இந்த பேருந்துகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்கப்படுவதாகவும் அந்த சிறப்பு பேருந்துகளை அடையாளம் கொள்ள பேருந்துகளின் முகப்பில் பள்ளிக்கல்வித்துறை என்னும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் ஆசியர்கள் பயண சீட்டு பெற்றும், மாணவர்கள் பயண சீட்டு இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்றும் பிற பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.