சொத்துக்களை அபகரித்து நடுத்தெருவில் தவிக்கவிட்ட மகன்; 108வயது மூதாட்டியிடம் டிஎஸ்பி அளித்த உறுதி

சொத்துக்களை அபகரித்து நடுத்தெருவில் தவிக்கவிட்ட மகன்; 108வயது மூதாட்டியிடம் டிஎஸ்பி அளித்த உறுதி

விழுப்புரம் சிறுவந்தாடு கிராமத்தில் மூன்று விதவை மகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் 108வயது மூதாட்டி கிருஷ்ணவேணி. சொந்த வீடு 11 ஏக்கர் நிலம் இருந்தும் இந்த அவலம் ஏன் என்று அக்கம்பக்கத்தினர் விசாரித்திருக்கிறார்கள்.

ஓய்வுபெற்ற அரசு அலுவலரான தனது மகன் கணேசன், தன்னையும் சகோதரிகளையும் கவனித்துக்கொள்வதாக சொல்லி எல்லா சொத்தையும் அபகரித்துவிட்டான். சாப்பாட்டுகே திட்டாட்டமாக இருக்குது என்று சொல்லி புலம்பியுள்ளார் கிருஷ்ணவேனி.

சொத்துக்களை அபகரித்து நடுத்தெருவில் தவிக்கவிட்ட மகன்; 108வயது மூதாட்டியிடம் டிஎஸ்பி அளித்த உறுதி

இதையடுத்து ஏமாற்று பேர்வழியான கணேசனுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று அக்கம்பக்கத்தினர் கொடுத்த ஆலோசனையின் படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனை சந்தித்து புகார் அளித்திருக்கிறார்.
மூதாட்டியின் நிலை கண்டு ஆவேசமான ராதாகிருஷ்ணன் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருக்கிறார்.

தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் கணேசன் வந்ததும், நிச்சயம் சொத்துக்களை அல்லது பணத்தை மீட்டு தருகிறேன் என்று மூதாட்டியிடம் உறுதி அளித்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.