ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

 

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி காலி பதவிகளுக்கு 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள, 27 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த, 15 முதல் நேற்று வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அக்டோபர், 9ல் தேர்தல் நடக்க உள்ளது. நேற்று வரை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் வார்டு எண்–5க்கு, 12 பேரும், ஈரோடு ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண்–4க்கு, 7 பேரும், பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண்–10க்கு, 15 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல், சென்னிமலை ஒன்றியம் முகாசிபுலவன்பாளையம் மற்றும் அந்தியூர் ஒன்றியம் சங்கராபாளையம் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு தலா 5 பேரும், நம்பியூர் ஒன்றியம் கூடக்கரை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, 8 பேரும், பெருந்துறை ஒன்றியம் கருக்குபாளையம் பஞ்சாயத்து, தலைவர் பதவிக்கு 6 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்!


இதேபோல், மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 20 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 48 பேரும் விண்ணப்பித்து உள்ளனர். அதிகபட்சமாக பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி பஞ்சாயத்து வார்டு எண்–11க்கு 5 பேரும், டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் வார்டு எண்–2 மற்றும் வார்டு எண்–8க்கு தலா 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் காலியாக உள்ள 27 பதவிகளுக்கு, 106 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இன்று வேட்பு மனு பரிசீலனையும், 25 மாலை, 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறுதலும் நடக்கிறது. தொடர்ந்து, அக்., 9 காலை, 7 மணி முதல் மாலை, 6 மணி வரை ஓட்டுப்பதிவும், அக்., 12 காலை, 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.