106 வயது ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய மகேஷ்பாபு!

 

106 வயது ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய மகேஷ்பாபு!

தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான நடிகர் மகேஷ்பாபு தனது ரசிகையான 106 வயது பாட்டியை சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோவான நடிகர் மகேஷ்பாபு தனது ரசிகையான 106 வயது பாட்டியை சந்தித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் மகேஷ்பாபுவிற்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற தெலுங்கு பேசும் மாநிலங்கள் மட்டுமின்ரி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், 106 வயதான பாட்டி ஒருவர் மகேஷ்பாபுவின் தீவிர ரசிகையாக இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ராஜமுந்திரியைச் சேர்ந்த ரேலங்கி சத்யவதி(106) என்ற பாட்டி நடிகர் மகேஷ்பாபுவை சந்திப்பதை தனது நீண்ட நாள் ஆசையாக வைத்துள்ளார். இது குறித்து அறிந்த நடிகர் மகேஷ்பாபு, தற்போது நடித்து வரும் ‘மகரிஷி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அந்த பாட்டியை அழைத்து வரக் கூறியுள்ளார்.

அதன்படி, ‘மகரிஷி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பாட்டி ரசிகையுடன் மகேஷ்பாபு சிரித்து பேசி அவரது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக தற்போதுள்ள மாஸ் நடிகர்களை குழந்தைகள், இளைஞர்கள் ரசிகர்களாக இருப்பது வழக்கம் தான். ஆனால், இத்தனை வயதாகும் பாட்டி ஒருவர் இளம் நடிகரின் ரசிகை என்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.