105 வயதில் 205 மதிப்பெண் பெற்று 4 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மூதாட்டி!

 

105 வயதில் 205 மதிப்பெண் பெற்று  4 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற  மூதாட்டி!

105 வயதான பாகீரதி அம்மா என்ற மூதாட்டி தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது.

கேரள மாநிலத்தில்  மாற்றுக்கல்வித் திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் கல்வி கடக வாய்ப்பில்லாமல் இருந்தோர், படிக்கும் ஆர்வம் உள்ளோர் தேர்வு ஏழ்கு தேர்ச்சி பெறலாம். அதன்படி கடந்தாண்டு 4 ஆம் வகுப்புக்கு இணையான சமச்சீர் தேர்வு நடைபெற்றது. இதில் திரிக்கருவா பகுதியைச் சேர்ந்த 105 வயதான பாகீரதி அம்மா என்ற மூதாட்டி தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. 

ttn

20 ஆயிரம் பேர் எழுதிய இந்த தேர்வில், மூதாட்டி  பாகிரதி அம்மா 74.5 சதவீதம் அதாவது 275 மதிப்பெண்ணுக்கு 205 மதிப்பெண் பெற்று, 4 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், ‘படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. என் சிறுவயதிலேயே என் அம்மா இறந்துவிட்டார். நான் தான் என் தம்பிகளை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலை உருவானது. அடுத்து எனக்கு திருமணமாகி  30 வயதில்  கணவர் இறந்ததால், ஆறு குழந்தைகளை வளர்க்கவேண்டி இருந்ததால் படிக்க முடியாமலே போனது’ என்று கூறியுள்ளார். 

ttn

105 வயதில் 4 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதால் பாகீரதி அம்மா நாட்டின் மூத்த மாணவி என்ற பெருமையை பெற்றுள்ளார். இதை  தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.