மூக்கில் வடியும் ரத்தம்..103 டிகிரி காய்ச்சல்… இந்தியாவில் ’பச்சைப் பூஞ்சை’யால் பாதிக்கப்பட்ட முதல் நபர்

மூக்கில் வடியும் ரத்தம்..103 டிகிரி காய்ச்சல்…  இந்தியாவில் ’பச்சைப் பூஞ்சை’யால் பாதிக்கப்பட்ட முதல்  நபர்

கறுப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை தொற்றுகளின் வரிசையில் பஞ்சை பூஞ்சை தொற்றும் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, மற்ற பூஞ்சைகளை விடவும் பச்சை பூஞ்சையானது பயங்கரமானதாக இருக்கிறது.

மூக்கில் வடியும் ரத்தம்..103 டிகிரி காய்ச்சல்…  இந்தியாவில் ’பச்சைப் பூஞ்சை’யால் பாதிக்கப்பட்ட முதல்  நபர்

கறுப்பு பூஞ்சையைவிட வெள்ளை பூஞ்சை பயங்கரமானது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வெள்ளை பூஞ்சையை விட மஞ்சள் பூஞ்சை பயங்கரமானது என்று தெரியவந்தது. இந்த மஞ்சள் பூஞ்சை தொற்று உத்தரபிரதேசத்தில் உருவானது கண்டறியப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்து ‘ஆஸ்பர்கில்லோசிஸ்’எனும் பஞ்சை பூஞ்சை வந்து அச்சுறுத்துகிறது.

இந்தியாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு இந்த தொற்று பாதித்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த 34 வயது இளைஞருக்கு இத்தொற்று பாதித்திருக்கிறது என்று கண்டறியப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

கொரோனா தொற்று பாதித்த இந்த இளைஞர் மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்ற பின்னர் அண்மையில் வீடு திரும்பினார்.

மூக்கில் வடியும் ரத்தம்..103 டிகிரி காய்ச்சல்…  இந்தியாவில் ’பச்சைப் பூஞ்சை’யால் பாதிக்கப்பட்ட முதல்  நபர்

வீடு திரும்பிய இளைஞருக்கு மூக்கு வழியாக கடுமையான ரத்தக்கசிவு ஏற்பட்டது. காய்ச்சலும் கடுமையாக இருந்துள்ளது. கறுப்பு பூஞ்சை தொற்று பாதித்திருக்கும் என்று பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ந்தனர். அந்த இளைஞருக்கு பஞ்சை பூஞ்சை( ஆஸ்பர்கில்லோசிஸ்)தொற்று பாதித்திருப்பது தெரியவந்ததும், இளைஞரின் நுரையீல், சுவாசப்பாதை மற்றும் ரத்தம் ஆகியவற்றில் இத்தொற்று கடும்பாதிப்பினை ஏற்படுத்தி இருப்பதும், நுரையீரல் 90 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து நோயின் தீவிரம் கருதி, அந்த இளைஞரை விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து 103 டிகிரி காய்ச்சல் இருக்கிறது என்றும், காய்ச்சல் இன்னமும் குறைந்தபாடில்லை என்று தகவல்.