1035வது சதயவிழா : ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!

 

1035வது சதயவிழா : ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!

தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035 வது சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

1035வது சதயவிழா : ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனை அறியாதவர்கள் யாரும் இல்லை. ஆளுமை, அழகு, கம்பீரம் என இதிகாச வரலாறுகளில் இவரிமண் புகழை படிக்கும் போதே நம் புருவம் உயரும். மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திர நாளில் அரசால் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

1035வது சதயவிழா : ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!

இந்த விழாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். அத்துடன் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனால் தஞ்சை மாவட்டமே விழா கோலம் பூண்டிருக்கும் . ஆனால் இந்தாண்டு கொரோனா விதிமுறைகளுடன் இந்த விழா தொடங்கியுள்ளது.

1035வது சதயவிழா : ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!

இந்நிலையில் தஞ்சை மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035 வது சதய விழா இன்று தொடங்கியுள்ளது. த 1035 வது சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு ஆட்சியர் மரியாதை செய்தார். தஞ்சையில் அரசு சார்பில் ராஜராஜசோழன் சிலைக்கு ஆட்சியர் கோவிந்தராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

1035வது சதயவிழா : ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை!

வழக்கமாக இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும் சதயவிழா கொரோனா காரணமாக இன்று ஒருநாள் மட்டுமே நடத்தப்படுகிறது. ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்தல். பெருவுடையாருக்கு அபிஷேகம். இரவு சுவாமி வீதிஉலா நடக்கிறது. அதே சமயம் பட்டிமன்றம், பாட்டுமன்றம், கலை நிகழ்ச்சிகள், ராஜராஜன் விருது வழங்கும் நிகழ்வு உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் சதய விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.