Home தமிழகம் ராஜராஜனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா: பேரரசனுக்கு நன்றிக் கடன் செலுத்தப்படுமா?

ராஜராஜனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா: பேரரசனுக்கு நன்றிக் கடன் செலுத்தப்படுமா?

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராஜராஜன் பிறந்த நாள் விழாவான சதய விழா நாளை மறுதினம் 26.10.2020 திங்கட் கிழமை அன்று நடைபெறுகிறது. கொரோனா காலம் என்பதால் ஒருநாள் நிகழ்வாக விழாவை நடத்திடத் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை முடிவு செய்திருக்கிறது. அதன்படியே திங்கட்கிழமை மட்டும் இவ்விழா நடைபெறுகிறது.

கொரோனா காலம் என்பதால், பட்டிமன்றம், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை இவ்வாண்டு தவிர்க்கப்பட்டுள்ளது.

ராஜராஜனின் 1035ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவாக நடைபெறும் இவ்விழாவின் போது, மூலவரான பெருவுடையார் கருவறையிலும், மற்ற தெய்வ பீடங்களின் கருவறையிலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதே பேரரசனுக்குச் செலுத்தும் சிறந்த நன்றிக் கடனாகும் என்று வலியுறுத்தி இருந்தார் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியின் தலைவரும், தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவில் உள்ளவருமான மணியரசன்.

மேலும், சிவன் கோயிலுக்குரிய அர்ச்சனைத் தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் தேவாரம், திருமந்திரம் முதலிய கருவறை அர்ச்சனை மந்திரங்களில் கற்றுத்தேர்ந்த, தமிழ் ஓதுவாமூர்த்தி உள்ளார். தேவையானால் வெளியிலிருந்து மூத்த ஓதுவாமூர்த்திகளை அழைத்துக் கொள்ளலாம். இப்பொழுது கருவறையில் அர்ச்சனை செய்து கொண்டிருப்பவர்களையும் தமிழ் மந்திரம் ஓதி அர்ச்சனை செய்ய வழி காட்டலாம் என்று வலியுறுத்தி இருந்தார் மணியரசன்.

கடந்த 05.02.2020 அன்று நடைபெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருக்குடமுழுக்கில் கருவறையிலும் கலசத்திலும் தமிழ் மந்திரம் ஓதி அவ்விழாவை நடத்திட ஆணை இடக்கோரி, தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு சார்பில் நானும், மற்றவர்களும் தொடுத்த வழக்கில் 31.01.2020 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தமிழிலும் சமற்கிருதத்திலும் அர்ச்சனை செய்யுமாறு ஆணையிட்டது. அவ்வாணையின் படியே அக்குடமுழுக்கு தமிழிலும் சமற்கிருதத்திலும் நடத்தப்பட்டது.

இப்பொழுது நடைபெறவுள்ள தஞ்சைப் பெரியகோயில் சதயவிழாவிலும் பெருவுடையார் கருவறை மற்ற தெய்வங்களின் கருவறைகள் அனைத்திலும் தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சரையும் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டிருந்தார் மணியரசன்.

மணியரசன் போலவே பல்வேறு அமைப்பினரும், பல்வேறு கட்சியினரும் தங்களது கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அவர்களது கோரிக்கை ஏற்கப்படுமா?

மாவட்ட செய்திகள்

Most Popular

புரெவி புயல்: ‘வெளியே செல்லாதீர்’ என ராமநாதபுரம் மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்!

‘வெளியே செல்லாதீர்கள்’என ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவான புரெவி புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையில்...

மல்டி பிளக்ஸ் திரையரங்கு இனி இரண்டு, மூன்று சிறு திரையரங்குகளாக மாறும்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களின் பதவி ஏற்பு நிகழ்வு அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைவர், துணை தலைவர்கள், கெளரவ செயலாளர்கள்,...

அரசுப்பேருந்து மீது மினி லாரி மோதி விபத்து – ஓட்டுநர் படுகாயம்

திருப்பத்தூர் திருப்பத்தர் அருகே முன்னால் சென்ற அரசுப்பேருந்து மீது, மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெல்லக்கல்நத்தம்...
Do NOT follow this link or you will be banned from the site!