103 வயதில் 100மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெற்றிப்பெற்ற மூதாட்டி!

 

103 வயதில் 100மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெற்றிப்பெற்ற மூதாட்டி!

அமெரிக்காவில் 103 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்று சாதனைப்படைத்துள்ளார். 

அமெரிக்காவில் 103 வயது மூதாட்டி 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்று சாதனைப்படைத்துள்ளார். 

நியூ மெக்ஸிகோவில் உள்ள அல்புக்யுர்க்யூ என்ற பகுதியில் முதியவர்களுக்கான ஓட்டபந்தயம் நடைபெற்றது. இதில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். 100 மீட்டர் ஓட வேண்டும் என்பதே ஓட்ட பந்தயத்தின் முதல் விதி. இந்த போட்டியில் பங்கேற்ற ஜூலியா என்ற 103 வயது மூதாட்டி 45.62 விநாடிகளில் இலக்கை அடைந்து வெற்றிக்கோப்பையை தட்டி சென்றுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் ஜூலியா 39. 62 விநாடிகளில் கடந்து சாதனைப்படைத்திருக்கிறார்.  103 வயதை எட்டினாலும், இவரது துடிப்பும், வேகமும் குறையவில்லை என பார்வையாளர்கள் தெரிவித்தனர். நியூ மெக்ஸிகோவை சேர்ந்த ஜூலியா இசை, தோட்டக்கலை ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர். உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள தினமும் பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஓட்ட பந்தயத்தில் முதலிடம் பிடித்த ஜூலியா பாட்டி தங்க பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.