103 மீட்டர் பீட்சா சேலஞ்..! ஆஸ்த்திரேலிய அதிசயம்!

 

103 மீட்டர் பீட்சா சேலஞ்..! ஆஸ்த்திரேலிய அதிசயம்!

சமீபத்தில் ஆஸ்த்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பெரியளவில் பாதிப்பை சந்திருக்கிறது அந்த நாடு. லட்சகணக்கான மரங்களுடன் கோடிக்கணக்கான மிருகங்கள், பறவைகளும் கூட இந்த தீயிற்கு  பலியாகி விட்டன.

சமீபத்தில் ஆஸ்த்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பெரியளவில் பாதிப்பை சந்திருக்கிறது அந்த நாடு. லட்சகணக்கான மரங்களுடன் கோடிக்கணக்கான மிருகங்கள், பறவைகளும் கூட இந்த தீயிற்கு  பலியாகி விட்டன.

103-meter-pizza

இதை சமாளிக்கும் போராட்டத்தில் ஆஸ்த்திரேலியாவுக்கு ஆதரவாக உலகெங்கும் இருந்து உதவிக்கரங்கள் நீண்டதை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது . அந்த வரிசையில், நிதி திரட்டுவதற்காக உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான்களான ரிக்கிபாண்டிங்கும், ஷேன்வார்னும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் ஷேன்வார்ன் அணிக்கு மேற்கிந்திய தீவுகளின் கர்ட்னி வால்ஷும், பாண்டிங் அணிக்கு சச்சின் டெண்டுல்கரும் பயிற்சியாளர்களாக களமிறங்குகிறார்கள். 

இது போலவே நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கும் ஆஸ்த்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இத்தாலிய உணவகம் ஒன்று 103 மீட்டர் ( 338 அடி ) நீள பீட்சா ஒன்றை தயாரித்திருக்கிறது.அந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பீட்ஸாவில் இவ்வளவு நீளமான பீட்ஸா  தயாரித்திருப்பது இதுவே முதல் முறை. அதை விற்று, அதன் மூலம் கிடைக்கும் தொகையை ஆஸ்த்திரேலிய காட்டுத்தீயுடன் போராடும் தீயணைப்பு படை வீரர்களுக்கு வழங்கப் போவதாக சிட்னியில் உள்ள அந்த உணவகம் அறிவித்திருந்தது. 

அறிவிப்பு வெளியான  சில மணி நேரத்திலேயே இது வைரலாகிவிட, இந்த பீட்சாவைச் செய்ய எங்களுக்கு 4 மணி நேரம் ஆயிற்று.இதற்கு எவ்வளவு மாவு தேவைப்பட்டு இருக்கும் ?. யூகியுங்கள் என்று போட்டி வைத்து இருக்கிறது அந்த உணவகம். எப்படியோ ஒரு நற்காரியத்திற்கு நிதி திரண்டால் எல்லோருக்கும் மகிழ்ச்சி.