“தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை” – ஆட்சியர் தகவல்

 

“தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை” – ஆட்சியர் தகவல்

தஞ்சை

தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளதாக ஆட்சியர் கோவிந்தா ராவ் தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று வழங்கப்பட்டது. இதனையொட்டி, தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் கேவிந்தா ராவ் அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதுமான அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், மாற்று இயந்திரங்களும் இருப்பில் உள்ளதாகவும் கூறினார். சரிபார்ப்பு முடிந்த பின் நல்ல நிலையில் 4 ஆயிரத்து 986 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3 ஆயிரத்து 592 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 3 ஆயிரத்து 922 ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

“தஞ்சை மாவட்டத்தில் 102 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை” – ஆட்சியர் தகவல்

மேலும், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைவர்களின் உருவங்கள் 90 சதவீதம் மறைக்கப்பட்டுள்ளதாகவும், ஏதேனும் புகார்கள் வந்தால், அதை உடனடியாக கள அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மாவட்டத்தில் 102 பதற்றமான வாக்கு சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவற்றை வெப் கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, வாக்கு எண்ணிககை நடைபெறும் குந்தவை நாச்சியார் கல்லூரியையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.