102 வயதில் ஸ்கை டைவ் அடித்த பாட்டி; வைரல் வீடியோ!

 

102 வயதில் ஸ்கை டைவ் அடித்த பாட்டி; வைரல் வீடியோ!

102 வயதாகும் மூதாட்டி ஒருவர் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வானில் சாகசம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா: 102 வயதாகும் மூதாட்டி ஒருவர் சுமார் 14,000 அடி உயரத்தில் இருந்து குதித்து வானில் சாகசம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐரின் ஓ ஷெயா(102) என்ற மூதாட்டி 14,000 அடி உயரத்தில் இருந்து அசால்ட்டாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். மோட்டார் நியூரான் என்ற நரம்பியல் சம்மந்தமான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மூதாட்டி இதனை செய்துள்ளார். ஐரினின் 67 வயதுடைய மகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

skydiving

ஐரின் தனது 100வது வயதில் முதன்முறையாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். எனது மகளின் இழப்பு என்னை வாட்டுகிறது. நீண்ட காலம் உயிரோடு இருந்தால் எனது 105வது வயதிலும் ஸ்கை டைவிங் செய்வேன். ஸ்கை டைவிங் செய்யும்போது சாதாரணமாக தான் உணர்ந்தேன். வானம் மிகவும் தெளிவாகவும், பயங்கர குளிராகவும் இருந்தது என்றார் ஐரின்.

skydiving

தென் ஆஸ்திரேலியாவின் மோட்டார் நியூரான் நோய் தொடர்பான அமைப்பிற்கு நிதித்திரட்டும் அகையில் மூதாட்டி இந்த சாகசத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.