10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

 

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சூழலிலும், வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது மகாராஷ்டிர மாநிலம் தான்.

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

அம்மாநிலத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. தேர்வுகளை ரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பில் கோரிக்கைகளும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் மகாராஷ்டிர பள்ளி கல்வித்துறை பொதுத்தேர்வை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!

இது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தேர்வு நடத்துவது சாதாரண காரியமல்ல. மாணவர்களின் நலனில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறோம். அதனால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். மே மாதம் இறுதியில் 12ம் வகுப்புக்கும் ஜூன் மாதத்தில் 10ம் வகுப்புக்கும் தேர்வு நடத்தப்படும். இது குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாகுமென தெரிவித்துள்ளார்.