10,11,12 பொதுத் தேர்வு.. புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்வி கேட்கப்படும் : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    20
    Thursday

Main Area

Main10,11,12 பொதுத் தேர்வு.. புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்வி கேட்கப்படும் : அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு!

exam
exam

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வுகள் எழுதி வந்த நிலையில், 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, கடந்த 2 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. 

ttn

பொதுவாக மாணவர்கள் அந்தந்த பாடத்திற்குரிய ப்ளூ பிரிண்ட் வைத்துத் தான் தாயார் செய்வார்கள். ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்காக அட்டவணை மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியாகியும்  ப்ளூ பிரிண்ட் வெளியாகாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மாணவர்கள் மட்டுமில்லாமல், எந்த வகை கேள்விகள் கேட்கப்படும் என்று ஆசிரியர்களும் குழப்பமடைந்துள்ளனர். 

ttn

இந்நிலையில், இது குறித்து அரசு தேர்வு இயக்ககம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், Blue Print தேவையில்லை என்பது அரசு எடுத்த முடிவு. அதனால் புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும். மாதிரி வினாத்தாளில் உள்ளது போன்று தேர்வில் கேட்கப்படவில்லை என்ற எந்த குழப்பமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது. இது மாணவர்களைப் பீதி அடையச் செய்துள்ளது. 


 

2018 TopTamilNews. All rights reserved.