10,11,12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

 

10,11,12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளையும் 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வரும் வியாழன் அன்றும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

10,11,12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிப்பு

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் நவம்பர் 3ஆம் தேதி மற்றும் 4ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10,11,12ம் வகுப்பு மறுகூட்டலுக்கு மாணவர்கள் 205 ரூபாயும், 11மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற 275ரூபாயும் செலுத்த வேண்டும் மற்றும் உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305ரூபாய் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெறும் மாணவர்கள் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது