பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது

 

பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது

மூன்று மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களூக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளபடி, இந்தியாவில் தினந்தோறூம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகின்றன.

பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது

தமிழகத்தை பொறுத்தவரையிலும் பெட்ரோல், டீசல் விலை ஏற்ற/இறக்கங்களை சந்தித்து வருகிறது.

ராஜஸ்தான், மராட்டியம், மத்திய பிரதேச மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்துள்ளது. ராஜஸ்தானில் பல்வேறு நகங்களில் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கிறது. ஜெய்ப்பூரில் 100.17க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

மராட்டியத்தில் தானே நகரில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துவிட்டது. மராட்டிய தலைநகர் மும்பையில் 99.94 ரூபாய்க்கு விற்பனை ஆகின்றது. டீசல் 91.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 95.06 ரூபாய்க்கும், டீசல் ஒரு லிட்டர் 89.11 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் – டீசல் விலையினை உயர்த்துவதை மத்திய அரசு ஒரு வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் விரும்புகின்றனர்.