பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது!

 

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது!

இந்திய வரலாற்றில் முதன் முறையாக பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.13க்கு விற்பனை ஆனது.

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது!

கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல் விலையேற்றம் பற்றிய பேச்சாகவே இருக்கிறது. தமிழகத்தில் பெட்ரொல் விலை ரூ.90ஐ தாண்டிவிட்டது. சதம் அடிக்கப்போகிறது என்று மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

பெட்ரோல் விலையேற்றத்தினால் விலைவாசி உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

அதே நேரம் மீம்ஸ் போட்டும், பல விதமாக டுவிட் போட்டும் விலையேற்றத்தை சிரித்து கவலையை போக்கி வருகிறார்கள்.

பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது!

’’காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’’, ’’உசுரே போகுது உசுரே போகுது பெட்ரோல் விலைய பார்க்கையிலே…’’, ’’ஒரு பொய்யாவது சொல்கண்ணே பெட்ரோல் விலை குறையும் என்று…’’, ’’சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் ஆஹா அவனே கொள்ளையனடி’’ என்று கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களை கொஞ்சம் மாற்றி அவருக்கே அனுப்பி வைத்தும் வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தானில் பெட்ரோல் விலை சதம் அடித்திருப்பது இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.