Home இந்தியா 100 சதவீதம் மின்சார ரெயில்களாக மாறும் இந்திய ரெயில்வே – உலக அளவில் புதிய சாதனை முயற்சி

100 சதவீதம் மின்சார ரெயில்களாக மாறும் இந்திய ரெயில்வே – உலக அளவில் புதிய சாதனை முயற்சி

வருகிற 2030-ம் ஆண்டை இலக்காக வைத்து இந்திய ரெயில்வேத் துறை பல்வேறு புரட்சிகரமான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. புவி வெப்பமயமாவதை தடுக்கும் பொருட்டு “பசுமை ரயில்வே” என்ற புதிய திட்டத்தை களமிறக்கியுள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் பழைய டீசல் ரெயில்கள் அனைத்தும் மாற்றப்பட்டு முழுக்க,முழுக்க மின்சார ரெயில்களே இயங்கும். இதன் மூலம் உலகின் முதல் பசுமை ரயில்வே என்ற பெருமை இந்தியாவைச் சேரும்.


அந்த வகையில் இதுவரை 40,ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரூட் கிமீ மின்மயமாக்கலை முடித்துள்ளது, டிசம்பர் 2023-க்குள் பிராட் கேஜ் (பிஜி) நெட்வொர்க்கில் உள்ள அனைத்து வழிகளையும் மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதிருக்கும் சுமார் 2700 டீசல் என்ஜின்கள் அனைத்தும் படிப்படியாக மின்சார என்ஜின்களாக மாற்றப்படும் எனத் தெரிவித்துள்ளது. வரும் 2022- டிசம்பருக்குள் 100 சதவீதம் மின்மயமாக்கலை முடித்து அடுத்த 2030-க்குள் அனைத்து விதமான திட்டங்களும் முடிக்கப்பட்டு இந்திய ரெயில்வே உலகின் உன்னமான இடத்தைப் பிடிக்க காத்திருக்கிறது.

சுபாஷ் சந்திரபோஸ்

மாவட்ட செய்திகள்

Most Popular

பொதிகை டிவியில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு எதிராக முறையீடு!

சமஸ்கிருத செய்தியை அனைத்து மாநில தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப வேண்டும் என்ற மத்திய அரசின் அறிக்கைக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம்- ஶ்ரீரங்கத்தில் 20 அடி உயர சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

திருச்சி திருச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, நம்பெருமாள் காலை...

டெல்லியில் வெடிக்கும் விவசாயிகள் போராட்டம்- அமித்ஷா அவசர ஆலோசனை!

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கூடி கடந்த வியாழக்கிழமை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அம்பாலா அருகே அவர்களை தடுத்து...

ஒரு கிலோ சிக்கன் 5 பைசா! பழைய பைசா யாரிடமும் இருக்காது என்று அறிவித்த கடைக்காரர் அதிர்ச்சி!

ஐந்து பைசாவுக்கு திண்டுக்கல்லில் பிரியாணி கொடுத்து அசத்தியபோலவே, ஐந்து பைசாவுக்கு ஒரு கிலோ சிக்கன் இறைச்சி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மதுரை கடைக்காரர். பொதுவாக...
Do NOT follow this link or you will be banned from the site!