இந்தியா சாதனை:100 மில்லியன் டோஸ் தடுப்பூசி மைல்கல்லை எட்டிய முதல் நாடு

இந்தியா சாதனை:100 மில்லியன் டோஸ் தடுப்பூசி மைல்கல்லை எட்டிய முதல் நாடு

உலக நாடுகளில் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசி மைல்கல்லை எட்டி இந்தியா சாதனை படைத்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தியா சாதனை:100 மில்லியன் டோஸ் தடுப்பூசி மைல்கல்லை எட்டிய முதல் நாடு

முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு கோரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்றாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியா சாதனை:100 மில்லியன் டோஸ் தடுப்பூசி மைல்கல்லை எட்டிய முதல் நாடு

நேற்றுடன் 85ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 85ஆவது நாளான நேற்று 100 மில்லியன் டோஸ் தடுப்பூசியை கடந்திருக்கிறது இந்தியா. உலக நாடுகளில் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசி என்ற மைல்கல்லை எட்டிய முதல் நாடு இந்தியா என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

100 மில்லியன் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கின்ற பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனை பாராட்டிற்குரியது என்று பலரும் சொல்லி வருகின்றனர்.