100 நாட்களுக்கு துவைக்காமல் உடுத்தலாம்.. ‘கிரிபி’ உள்ளாடைகள்!

 

100 நாட்களுக்கு துவைக்காமல் உடுத்தலாம்.. ‘கிரிபி’ உள்ளாடைகள்!

ஒரு நாளைக்கு மேல் உள்ளாடையை துவைக்காமல் உடுத்த முடியாது. கோடைக்காலம் என்றால் இரண்டு முறையாவது உள்ளாடை உடுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். இதற்காகவே சிலர் துவைக்கவேண்டுமே அலுத்துக்கொள்வதுண்டு. அத்தகையை பார்ட்டிகளுக்கு வரப்பிரசாதாமாக வந்திருக்கிறது கிரிபி உள்ளாடை.

இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக்கும் கூட துவைக்காமலேயே அணிந்துகொள்ளலாம். அதனால் எந்த துர்நாற்றமும் அடிக்காது என்கிறார்கள். ஆனால், அவ்வப்போது கொஞ்சம் காற்றோட்டத்தில் வைத்திருக்க வேண்டுமாம்.

100 நாட்களுக்கு துவைக்காமல் உடுத்தலாம்.. ‘கிரிபி’ உள்ளாடைகள்!

காற்றோட்டத்தில் வைத்துவிட்டு மீண்டும் அணியும்போது, துவைத்து காயவைத்த உள்ளாடையை அணியும் உணர்வு எற்படுகிறதாம்.

ஹெர்க்பைபர் எனும் பைபரால் இந்த உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பேப்ரிக்கில் மூங்கில், யூகலிப்டச், பீச்வுட், தாமிரம் ஆகியவை அடங்கி இருப்பதால், நீண்ட நாட்களுக்கு பாக்டீரியாக்கள் தாக்காமல், புதுமையாகவே வைத்திருக்கிறது. என்கிறார்கள்.

100 நாட்களுக்கு துவைக்காமல் உடுத்தலாம்.. ‘கிரிபி’ உள்ளாடைகள்!

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் ஹெர்க்லான் நிறுவனம் இந்த கிரிபி உள்ளாடையை தயாரித்திருக்கிறது.

முன்னதாக இந்த நிறுவனம், சாக்ஸ் மற்றும் பெட்ஷீட்களையும் இந்த முறையில் விற்பனை செய்திருக்கிறது எனப்து குறிப்பிடத்தக்கது.

100 நாட்களுக்கு துவைக்காமல் உடுத்தலாம்.. ‘கிரிபி’ உள்ளாடைகள்!

’’இரண்டு வருட ஆராய்ச்சி மற்றும் சோதனைக்குப் பிறகு, நாங்கள் ஹெர்க்ஃபைபரை உருவாக்கினோம். சந்தையில் உள்ள வேறு எந்தப் பொருளையும் போலல்லாமல் எங்கள் தனித்துவமான பொருள். மூங்கில், யூகலிப்டஸ், பீச்வுட் மற்றும் காப்பர் இழைகளின் கலவையுடன் ஹெர்க்பைபர் தயாரிக்கப்படுகிறது. தாமிரம் தொற்று எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் சருமத்தை உறுதிப்படுத்துகிறது மற்றும் குணப்படுத்துகிறது. மேலும் அது துணியை அசைக்கும்போது உங்கள் ‘சிறப்பு’ சாஸுடன் போராடும் ஒரு சிறப்பு சாஸைப் பெறுவீர்கள்’’ என்று தெரிவித்திருக்கிறது ஹெர்க்லான் நிறுவனம் .