பள்ளிகளில் நட்பு, காதலுக்கு 100% தடை விதித்த நாடு!

 

பள்ளிகளில் நட்பு, காதலுக்கு 100% தடை விதித்த நாடு!

நம்மூர் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நட்பும், காதலும்தான் முதலிடம் வகிக்கிறது. ஆனால், வடகொரிய பள்ளிகளில் நட்புக்கும், காதலுக்கும் இடமே இல்லையாம்.

வடகொரியாவில் கிம் ஜாங் ஆட்சியில் இந்த அளவிற்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார் இளம்பெண் யியோன்மி பார்க்.

வடகொரியாவில் பிறந்து 13 வயது வரை அங்கேயே வாழ்ந்தவர் யியோன்மி. பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு குடும்பத்துடன் அகதியாக வெளியேறிவிட்டார். சீனாவுக்கு சென்ற குடும்பம், அங் கேயும் துன்பத்தையே அனுபவித்துள்ளது. மங்கோலியா, தென்கொரியா என்று மாறி, மாறி போய்க்கொண்டிருந்த யியோன்மியின் வாழ்கைப்பயணம் தற்போது நியூயார் நகரில் நிலைபெற்றிருக்கிறது.

பள்ளிகளில் நட்பு, காதலுக்கு 100% தடை விதித்த நாடு!

தற்போது அவர் வடகொரியாவின் நிலை பற்றியும், அந்நாட்டில் அப்பாவி மக்களின் நிலை குறித்தும் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தினக்கூலி வேலை செய்பவர்கள் பெரும்பாலும் பூச்சிகளையே சாப்பிட்டு வருகின்றார்கள் என்றும், தானும்13 வயது வரை பூச்சிகளை சாப்பிட்டு வளர்ந்ததகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஐநா ஆய்வின்படியும் வடகொரியாவில் மொத்த மக்கள் தொகையில் 43 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவருந்துபவர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

அணு ஆயுத தயாரிப்பில் அதி தீவிரம் காட்டும் கிம் ஜாங் அரசு, அதற்காக கோடிக்கணக்கான டாலர்கள் செலவும் செய்கிறது. இந்த செலவில் ஒரு 20 சதவிகிதத்தையாவது அந்த அப்பாவி மக்களுக்கு செலவிட்டால் அந்நாட்டில் பட்டினி சாவுகள் இருக்காது என்கிறார் யியோன்மி.

அதுவும் நியாயம்தானே!