ஓபிஎஸ் மகன் போட்டியிட 100 விருப்ப மனுக்கள்: ஓபிஎஸ்-ன் விருப்பம் என்ன?

 

ஓபிஎஸ் மகன் போட்டியிட 100 விருப்ப மனுக்கள்: ஓபிஎஸ்-ன் விருப்பம் என்ன?

துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 100 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஓபிஎஸ் மகன் போட்டியிட 100 விருப்ப மனுக்கள்: ஓபிஎஸ்-ன் விருப்பம் என்ன?

அதிமுகவில் கடந்த 24ம் தேதி அன்று விருப்பமனு தாக்கல் தொடங்கியது. சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் விருப்பமனு தாக்கல் செய்யும் காலத்தை குறைத்து, மார்ச்3ம் தேதி அன்றுதான் கடைசி தினம், மாலைக்குள் விருப்பமனுவை பூர்த்தி செய்து கொடுத்துவிட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்திருந்தனர். அதனால் இன்று கடைசி தினம் என்பதால் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நாளை நேர்காணல் நடத்துகிறது அதிமுக. நாளை ஓரே நாளில் இந்த நேர்காணலை நடத்தி முடிக்க இருக்கிறது அதிமுக.

ஓபிஎஸ் மகன் போட்டியிட 100 விருப்ப மனுக்கள்: ஓபிஎஸ்-ன் விருப்பம் என்ன?

விருப்ப மனு தாக்கல் செய்தவர்களில் 100க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பெயரில் தாக்கல் செய்திருப்பது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஓபிஎஸ்சின் இன்னொரு மகன் ரவீந்திராநாத் எம்.பியாக இருக்கும் நிலையில் அவரது இன்னொரு மகன் ஜெயபிரதீப் எம்.எல்.ஏவாக அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஜெயபிரதிப்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓபிஎஸ்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்.