1000,00,000 ரூபாயை ஆட்டையை போட்ட திமுக வேட்பாளர்… ஸ்டாலின் தேர்வு செய்த அடேங்கப்பா அப்பாடக்கர்..!

 

1000,00,000 ரூபாயை ஆட்டையை போட்ட திமுக வேட்பாளர்…  ஸ்டாலின் தேர்வு செய்த அடேங்கப்பா அப்பாடக்கர்..!

கட்சியினர் வசூல் செய்தது என மொத்தம் 20 கோடி ரூபய் கிடைத்துள்ளது. இதில் பாதியை அதாவது 10 கோடி ரூபாயை தான், வேட்பாளர் செலவு செய்திருக்கிறார். அதுவும், கடைசி நேரத்தில், கையை ரொம்பவே சுருக்கிட்டாராம். இதனால், நொந்து போன கட்சிக்காரங்க, தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள்.

திருநெல்வேலி மக்களவை தொகுதியில, அதிமுகவில், மனோஜ் பாண்டியனும், திமுக வேட்பாளராக  ஞானதிரவியமும் போட்டியிட்டார்கள். தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் இரு கட்சி வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தார்கள். இதில், அ.தி.மு.க.,வினர் கொடுத்த பணம், அடிமட்டம் வரைக்கும் போய் சேர்ந்து விட்டது.  எதிர்க்கட்சியான, திமுகவினரை, பறக்கும் படையினர் விரட்டி விரட்டி பிடித்ததால் அவர்களால் பட்டுவாடாவை பெரிய அளவில் செய்ய முடியவில்லை. ஸ்டாலின்

அதே நேரம், பட்டுவாடாவுக்கு என வேட்பாளரிடம், கிழக்கு மாவட்டச் செயலர் ஆவுடையப்பனும், மத்திய மாநகர் மாவட்டச் செயலர் அப்துல் வகாப்பும், தலா, 2 கோடி ரூபாயை வாங்கி இருந்தார்களாம்.  அதை வேட்பாளரிடம் திருப்பி கொடுக்காமல் அவர்களே வைத்துக் கொண்டார்களாம்.ஸ்டாலின்
 
வேட்பாளரே பணத்தை பதுக்கின கதை தஞ்சாவூர் மக்களவை தேர்தலில் நடந்திருக்கிறது. தஞ்சாவூரில் மக்களவை தேர்தலோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் சேர்த்தே நடந்தது.  இதில், சட்டசபைக்கு,  தி.மு.க.,வின் நகர செயலர், நீலமேகம் போட்டியிட்டார். தேர்தல் செலவுக்கு, தலைமை தந்தது, கட்சியினர் வசூல் செய்தது என மொத்தம் 20 கோடி ரூபய் கிடைத்துள்ளது. இதில்  பாதியை அதாவது 10 கோடி ரூபாயை தான், வேட்பாளர் செலவு செய்திருக்கிறார்.  அதுவும், கடைசி நேரத்தில், கையை ரொம்பவே சுருக்கிட்டாராம். இதனால், நொந்து போன கட்சிக்காரங்க, தலைமைக்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள். செலவு விபரங்களை, தலைமை செலவு கணக்கை கேட்டால் என்ன செய்வதென்று வேட்பாளர் பதற்றத்தில் இருக்கிறாராம்.