ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு…அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

 

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு…அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி, ” பையனூரில் கொடுக்கப்பட்டுள்ள 50 ஏக்கர் நிலத்தில் மொத்தமாக 6 ஆயிரம் வீடுகள் கட்டலாம். ஆனால் முதல்கட்டமாக 1000 வீடுகளை கட்ட உள்ளோம். அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் அடிக்கல் நாட்டித் துவக்கி வைக்கவிருக்கிறார்.” என்று தெரிவித்திருந்தார். அதன் படி, செங்கல்பட்டு பையனுரில் முதல்கட்டமாக 1000 குடியிருப்புகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு…அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

அதே போல திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராமில் டைடல் பார்க்குக்கு காணொளி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.235 கோடி மதிப்பிலான அந்த பூங்காவுக்கு 10 ஏக்கரில் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் 21 அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில், ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு கட்ட முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார். மேலும், தலைமை செயலகத்தில் அரங்கம் அமைக்க ஆர்.கே.செல்வமணியிடம் ரூ.50 லட்சம் காசோலையை முதல்வர் வழங்கினார்.