சென்னை மருத்துவமனைகளில் கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்!

 

சென்னை மருத்துவமனைகளில் கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்!

சென்னையில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில் தான் இருக்கின்றனர். இதனால் அங்கு சிகிச்சை அளிக்க தட்டுப்பாடு நிலவுவதால், நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் சென்னை முழுவதும் கொரோனா சிகிச்சை அளிக்க முதுநிலை மருத்துவம் படித்து முடித்த 1000 மருத்துவர்கள் கூடுதலாக சென்னையில் பல்வேறு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை மருத்துவமனைகளில் கூடுதலாக 1000 மருத்துவர்கள் நியமனம்!

முதுநிலை மருத்துவ படிப்பு 3 ஆம் ஆண்டு படித்து வந்த மருத்துவர்களுக்கு வகுப்புகள் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது. அதன் பிறகு நடக்கவிருந்த இறுதித் தேர்வு கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருவதால் அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இறுதித்தேர்வு எழுதலாமேலே 1000 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.