darbar
  • January
    22
    Wednesday

Main Area

Main



சீனாவிற்கு கடத்தப்பட்ட செல்லப்பிராணி; பார்சலை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி!

கோபுப்படம்
கோபுப்படம்

பீய்ஜிங்: சீனாவிற்கு கடத்தப்பட்ட உயிருள்ள எறும்புகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சீனாவின் ஹுனான் மாகாணத் தலைநகர் சங்ஸாவில் பிரிட்டனில் இருந்து கடத்தப்பட்ட உயிருள்ள எறும்புகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சுமார் 1.4 செ.மீ நீளம் கொண்ட 37 கருப்பும் சிவப்பும் கலந்த ராணி எறும்புகள், எறும்பு முட்டை உள்பட 1000 எறும்புகள் சோதனை குழாய்கள் மூலம் கடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், செல்லப்பிராணி வளர்புக்காக அவை கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

china ant

அவைகள் அனைத்தும் கட்டெறும்புகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அதனுடைய கவர்ச்சியான தோற்றம், செல்லப்பிராணி வளர்ப்பாளர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளதாகவும், இந்த எறும்புகள் வேகமாக இனப்பெருக்கம் செய்யும் தன்மை பெற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

china parcel

உயிருள்ள பிராணிகளை இதுபோன்று அனுப்புவது சீனாவில் தடை செய்யப்பட்டுள்ள ஒன்று எனவும், சொந்த நாட்டை சேராத அயல்நாட்டை சேர்ந்த எறும்புகள் நாட்டின் சுற்றுச் சூழலுக்கு அச்றுத்தலை எற்படுத்தும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், எறும்புகள் வந்த அந்த பார்சலை அழித்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.