கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் கோயில்கள்!

 

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் கோயில்கள்!

ஆந்திராவில் கோயில்களில் உள்ள மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படுகிறது.

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் கோயில்கள்!

ஆந்திராவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்துவருவதன் காரணமாக மருத்துவமனைகள் ஐ.சி.யூ மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் முழுவதுமாக நிரம்பின. இதனால் கோயில் கட்டிடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க மாநில அரசு முடிவு செய்தது.

தற்போதுவரை ஆந்திரா முழுவதும் 16 கோயில்கள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு 1,000 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயில்களில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகளை கவனித்துக்கொள்ள தனி மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரபல கோயில்களில் உள்ள மண்டபங்கள், விருந்தினர் இல்லங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.