1000 ஜிபி மெமரி கார்டு அறிமுகம்! எவ்வளவு விலை தெரியுமா??

1000 ஜிபி மெமரி கார்டு அறிமுகம்! எவ்வளவு விலை தெரியுமா??

சான்டிஸ்க் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக 1000 ஜிபி அதாவது 1 டி.பி. திறனுள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டினை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சான்டிஸ்க் நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக 1000 ஜிபி அதாவது 1 டி.பி. திறனுள்ள மைக்ரோ எஸ்.டி. கார்டினை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய பிரச்னையாக இருப்பது மெமரி. புகைப்படங்கள், செயலிகள், வீடியோக்கள், வாட்ஸ் அப் சாட்ஸ் என அனைத்தையும் ஒரு சிறிய மெமரி கார்டில் எளிதாக வைத்துக்கொள்ளலாம். மெமரி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சான்டிஸ்க் நிறுவனம் 1000 ஜிபி எக்ஸ்ட்ரீம் மைக்ரோ எஸ்.டி. கார்டை உருவாக்கி உள்ளது. புதிய மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் சாதனத்தில் அதிக மெமரி கொண்ட தரவுகளை சேமிக்க முடியும்.

முன்னதாக இந்த மைக்ரோ எஸ்.டி. கார்டு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இது அமேசான் தளத்தில் 31,540 ரூபாய்க்கு இந்த கார்டு விற்பனை செய்யப்படுகிறது.  இந்த 1000 ஜிபி மெமரி கார்டு ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.