1000 ஏக்கர் நிலம்… திமுகவுக்கு ராமதாஸ் பகிரங்க சவால்..!

 

1000 ஏக்கர் நிலம்… திமுகவுக்கு ராமதாஸ் பகிரங்க சவால்..!

. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நேர்மை.

எனக்கு 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்’’ என பாமக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முரசொலி நிலம் தொடர்பாக பொய்ப் புகார் அளித்தோர் மீது திமுக தொடரும் அவதூறு வழக்கில், முதன்முதலில் பொய்யுரைத்த மருத்துவர் ராமதாஸ். அவருக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலம் குறித்த உண்மைகள் வெளியாகும் எனத் தெரிவித்து இருந்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

Ramadoss

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ‘’முரசொலி நிலத்தின் மூலப்பத்திரத்தை அதன் நிர்வாகம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் இப்போதும் தாக்கல் செய்யவில்லை. மாறாக ஆணையத்துக்கே மிரட்டல் விடும் வழக்கமான வேலையை தான் திமுக செய்திருக்கிறது. மிரட்டல் விடுப்பதை விடுத்து மூலப்பத்திரத்தை காட்டுங்கள். அது தான் அறம். அது தான் நேர்மை.

முரசொலி விவகாரத்தில் குற்றமற்றவர்கள் என நிரூபிக்க முடியாத திமுக, அச்சிக்கலை எழுப்பிய மருத்துவரின் 1000 ஏக்கர் குறித்து தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளது. சவாலை ஏற்கிறேன். எனது 1000 ஏக்கர் குறித்த விவரத்தை கூறட்டும். அப்படி ஒரு நிலம் இருந்தால் அதை அவர்களுக்கே கொடுத்து விடுகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.