திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஜய், சிம்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக தியேட்டர்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்தன. இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர்
மாதம் முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் வராததால் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் பிஸ்கோத் படங்கள் உள்பட ஒரு சில படங்களே தியேட்டரில் வெளிவந்தன. இதை தவிர பழைய படங்களே தியேட்டரில் வெளியாகி ஒடின.

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

இதையடுத்து நடிகர் விஜய் முதல்வர் பழனிசாமியை சந்தித்து, பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் படம் வெளிவர இருப்பதால் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல் இன்று நடிகர் சிம்பு தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கோரி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்விரைவில் அரசாணை வெளி வரும் என்று தெரிவித்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென திரையரங்குகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.